பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்

பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்ணை, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடியே 39 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடியவர்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பணப்பட்டுவாடா குறித்து 1800 425 6669 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அவர் கூறினார். இதேபோல் 94454 67707 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும் தங்களது புகாரை பதிவு செய்யலாம் என சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *