தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி
நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் இயற்றிய மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியிருப்பதாக 2017 செப்டெம்பர் மாதக் கடிதத்திலேயே தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. அதை நம்மிடமிருந்து மறைத்திருக்கிறது தமிழக அரசு. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆறு மாதத்திற்குள் மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் Article 201-ன் படி, சட்டமன்றத்திற்கு உள்ளது. 21 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் இனி அதற்கு வாய்ப்பில்லை. இது, அதிமுக அரசு நம் தமிழக மாணவர்களுக்குச் செய்துள்ள பச்சைத் துரோகம் இல்லையா? இந்த துரோகத்துக்கு யார் பொறுப்பு? சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் எந்த அடிப்படையில் இன்னமும் பதவியில் தொடர்கிறார்? ராஜினாமா செய்யட்டும்.