தமிழ்நாடு
பசுமை வீடுகள் உண்டா? இல்லையா?
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள்கள் வீடுகளை இழந்து முகாம்களிலும், உறவினர்கள் வீடு, தெருவோரம் வாழ்வோர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
மதுரை உயர்நீதி மன்றத்தில் பொது நலமனு விசாராணைக்கு வந்தது. பிரதம மந்திரியின் “அவாஸ் யோஜனா மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மேலும் வீடுகளுக்கான மமதிப்புத் தொகையை50 சதவீதம் உயர்த்த வேண்டும் எனவும் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இவ்வழக்கு விசாராணைக்கு வந்தது.
இதுகுறித்துப் பதில் அளிக்குமாறு புயலால் பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.