கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்
தமிழ்நேரலை
14 வது ஆசிய கோப்பையின் துவக்க ஆட்டமானது பங்களாதேஷ் இலங்கை அணிகளுக்கு இடையே துபாயில் நேற்று நடை பெற்றது. டாசில் வென்ற பங்களாதேஷ் பேட்டிங்-ஐ தேர்வு செய்தது. மலிங்காவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் துவக்க விக்கெட்கள் விழுந்தன. அதன் பின் இணைந்த ரஹீம் மற்றும் மிதுன் ஜோடி சிறப்பாக விளையாடி 133 ரன்கள் சேர்த்தது. மிதுன் 63 ரன்களில் மலிங்காவிடம் தன் விக்கெட்டை பறி கொடுத்தார். அதன் பின் பங்களாதேஷ் வீரர்கள் குறிப்பிட்ட இடைவேளையில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். இருந்த போதிலும் சிறப்பாக விளையாடி சதம் கண்ட ரஹீம் 144 ரன்களில் இறுதி விக்கெட்டாக வீழ்ந்தார்.50 வது ஓவரில் 261 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கையின் மலிங்கா சிறப்பாக பந்து வீசி 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைபற்றினார். பின்னர் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை வீரர்கள் பங்களாதேஷ் அணியினரின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் விக்கெட்களை வேகமாக பறிகொடுத்தனர்.36வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இலங்கை அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை வீரர்கள் எவரும் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தவில்லை. பங்களாதேஷ் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய மோர்தசா, மிஷ்டி ஹாசன், முஸ்டபிகுர் ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். சதம் கண்ட பங்களாதேஷ் வீரர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யபட்டார்.