பாகிஸ்தான் எல்லை பகுதியில் இந்திய விமான படை வீரர் அபிநந்தன் கைது செய்யபட்டு இரண்டு தினங்களில் விடுதலை செய்யபட்டார். இம்ரான்கானின் இந்த நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை இம்ரானுக்கு தர வேண்டும் என டிவிட்டரில் உருவான ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகின. இந்நிலையில் இம்ரான்கான் தன் டிவிட்டர் பதிவில் நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களது விருப்பபடி அமைதி மற்றும் துணை கண்டத்தில் வளர்ச்சி ஏற்படுத்துபவர் எவரோ? அவரே நோபல் பரிசு பெற தகுதியானவர் என பதிவிட்டு உள்ளார்.
நோபல் பரிசு பெற இம்ரான்கான் தகுதியானவரா?
