தொழில்நுட்பம்

நோக்கியா 9 பியூர்வியூ

ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு, இந்தியாவின் புது டெல்லியில்  இன்று  துவங்குகிறது.

‘நோக்கியா 9 பியூர்வியூ’: விலை என்னவாக இருக்கும்?

ஐந்து பின்புற கேமராக்களை கொண்ட இந்த ‘நோக்கியா 9 பியூர்வியூ’ ஸ்மார்ட்போன் முதன்முதலில் மொபைல் உலக காங்கிரஸ் 2019 மாநாட்டில் நோக்கியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் பெயர் வெளியிடப்படாத ஸ்மார்ட்போன் ஒன்றை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இந்த ‘நோக்கியா 9 பியூர்வியூ’வும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எச் எம் டி குலோபல் நிறுவனமும் இதுகுறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அண்ட்ராய்ட்-ஒன் அமைப்புடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் 699 டாலர்கள் (48,700 ரூபாய்)-க்கு அறிமுகமானது. இந்தியாவிலும் இதே விலையில் தான் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘நோக்கியா 9 பியூர்வியூ’: சிறப்பம்சங்கள்!

5.99-இன்ச் QHD+ திரை(1440×2960 பிக்சல்கள்) அளவு கொண்ட இந்த ‘நோக்கியா 9 பியூர்வியூ’ ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 845 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது. மொத்தம் 5 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதில் மூன்று 12 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா, மற்றும் இரண்டு 12 மெகாபிக்சல் RGB கலர் சென்சார் கொண்ட கேமரா. அதுமட்டுமின்றி செல்பிக்களுக்காக 20 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரின்ட் மற்றும் 3,320mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன், வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker