நேரடி புயல் எச்சரிக்கை
தமிழ்நேரலையில் மட்டும்
கஜா புயலானது வங்கக் கடலில் நிலை கொண்டுயிருக்கிறது. கடலூர்க்கும் பாம்பனூக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10.15 மணிக்கு நிருபர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ள செய்தியில்.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி நாகப்பட்டிணத்தில் இன்று இரவு 11.30 மணியலவில் கரையை கடக்கும் எனத் தெரிவித்தார்.
இத்த கஜா புயலானது சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும், நாகைக்கு வடக்கிழக்கில் 300கி.மீ தொலைவிலும் உள்ளது. இது மணிக்கு 14கி.மீ இருந்து தற்போது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் காஜா புயலானது நகர்ந்து வருகிறது. இது இன்னும் 6மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
இதனால் 80கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும், இந்தக் காற்று ஒரு சில சமயக்களில் 100 கி.மீ வேகத்திலும் வீச வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.
அதனால் கடலோர மாவட்டகளிள் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டம் என அந்த அந்த மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கஜா புயலின் காரணமாகக் கடலோர மாவட்டகளின் மாவட்ட நிர்வாகம் முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.புயலின் காரணமாக நாகை, திருவரூர், காரைக்கால், பட்டுக்கோட்டை, கடலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சவூர், மன்னார்குடி கனமழை பெய்யும்.
கடலோர மாவட்டகளிலும், உள் மாவட்டகளிலும் கனமழை பெய்து வருகிறது.
நாகை மற்றும் காரைக்காலில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலின் காராணமாக நாகை, திருவரூர், காரைக்கால், பட்டுக்கோட்டை, கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் நடைப்பெறும் தேர்வுகள் ஓத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்க்கு முன்னர் கஜா புயலானது கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையிலிருந்து சுமார் 720 கிலோமீட்டர் தொலைவில் புயல் உருவாகி உள்ளது. புயலுக்கு “கஜா” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த 24 நேரத்தில் மேலும் தீவிரமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் அதிக வலு பெற்று தீவிரமடையும். அதன்பிறகு மேற்கு, தென் மேற்காக நகர்ந்து அது வலுவிழக்கக வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 15-ம் தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுக்கிறது. இதன் காரணமாக வட தமிழகம் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. என அரிவித்திருந்தது
சென்னையை பொறுத்தவரை 14/15 ம் தேதிகளில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது. காஜா புயலினால் சென்னைக்கு பதிப்பு குறைவு.
காற்று வேகமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 14ம் தேதிக்குப் பிறகு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் அந்த நேரங்களில் கடல் அலைகள் ராட்சஸ வேகத்தில் செயல்பட வாய்ப்புள்ளது. கடலில் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவிக்கப்படுகிறது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், புதுச்சேரி போன்ற கடலோர மாவட்டங்களில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும். இந்த எச்சரிக்கையைப் பொதுமக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுயிருத்தது.