இந்திய மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனை சுஷி பேட்ஸ் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய இந்திய வீராங்கனைகள் எக்ட பீஸ்ட் மற்றும் பூனம் யாதவ் தலா மூன்று விக்கெட்களை கைபற்றி அசத்தினர்.
அதன் பின் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 104 பந்துகளில் 105 ரன்கள் அடித்து ஆட்டம் முடியும் தருவாயில் அமெலியா கீர்ன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி 33 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு துவக்க வீராங்கனை ரோட்ரிக்ஸ் 94 பந்துகளில் 81 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் நின்றார்.