நேசமணி கதாபாத்திரத்திற்கு பிராத்தனை செய்யும் ரசிகர்கள்!

சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டர். கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடுவதை நகைச்சுவையாக சித்திரித்திருப்பார் இயக்குநர்.

அந்த புகைப்படம் தற்போது உலக அளவில் ப்ரே ஃபார் நேசமணி என்கிற ஹாஷ்டாக் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்த போட்டோ வைரலாக என்ன காரணம்.

ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.
அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்.” எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார்.

நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரச்சாரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *