நெடுநல்வாடை விமர்சனம்

அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம்தான் நெடுநல்வாடை. தாத்தா பூ ராம் ஒரு கிராமத்தில் வாழும் ஏழை விவசாயி. காதலித்து வீட்டை விட்டு செல்லும் இவரது மகள் வாழ்க்கையை தொலைத்து மகன் மற்றும் மகளுடன் தந்தையிடம் வந்து அடைக்கலம் அடைகிறார்.

 

 

 

அவர்களை வீட்டில் சேர்க்க கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் அவரது மகன் மைக் கோபி சகோதரி மற்றும் பிள்ளைகளை வெறுக்குகிறார். அவரது எதிர்ப்பையும் மீறி பேரன் இளங்கோவை படிக்க வைத்து நல்ல வேளையில் அமர்த்தி பார்க்க ஆசைப்படுகிறார் தாத்தா பூ ராம். பள்ளி முடித்து பாலிடெக்னிக் படிக்கும் இளங்கோவை காதலிக்கிறார் நாயகி அஞ்சலி நாயர். முதலில் மறுக்கும் இளங்கோ பிறகு அஞ்சலி நாயரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர்களது காதல் தாத்தாவிற்கு தெரியவர குடும்ப சூழ்நிலையை கூறி இளங்கோவிடம் காதல் வேண்டாம் என்கிறார். இவரது எதிர்ப்பையும் மீறி நாயகியை காதலிக்கும் இளங்கோ டிப்ளமோ முடித்து சென்னைக்கு வேலைக்கு செல்கிறார். இளங்கோ மற்றும் அஞ்சலி நாயரின் காதல் அஞ்சலி நாயர் வீட்டிற்க்கு தெரியவர அவருக்கு வேறொரு மாப்பிள்ளை உடன் நிச்சயம் செய்து திருமணம் முடிவு செய்கின்றனர்.

நாயகன் இளங்கோ நல்ல வேலைக்கு போய் தாத்தாவின் ஆசையை நிறைவேற்றினாரா அல்லது நாயகியை திருமணம் செய்து கொண்டு வேறொரு வாழ்க்கையை தேடி கொண்டாரா என படத்தின் மீதி கதை சொல்கிறது. அறிமுக நடிகர் இளங்கோ அறிமுக நடிகை அஞ்சலி நாயர் என படத்தில் நிறைய புதுமுகங்கள். இதுவே படத்தின் எதார்த்தமான கதை களத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து உள்ளது.

நடிகர் பூராம் மொத்த திரைக்கதையும் நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் பூ ராமை தமிழ் திரையுலகம் இன்னும் ஏன் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்ற கேள்வி படம் முடிந்து வெளிவரும் போது எழுகிறது. இயக்குனர் செல்வ கண்ணனின் எதார்த்தமான திரைக்கதையும் எளிமையான கதாபாத்திர வடிவமைப்பும் படத்தை தலை நிமிருந்து உட்கார செய்கிறது.

ஜோஸ் பிரான்க்ளின் இசையில் இரண்டு பாடல்கள் பிரமாதமாக வந்துள்ளன. கோவில் திருவிழா பாடல் எடுக்கப்பட விதம் அருமையாக உள்ளது. வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. கிராமத்து வயல்வெளிகளை அவர் காட்சிபடுத்தி இருக்கும் விதம் அற்புதமாக உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்று நீளமாக செல்கின்றன. மைக் கோபி படத்தின் இரண்டாம் பாதியில் வராமல் போவதும் குறையாக தெரிகிறது. குறைந்த பட்ஜெட்டில் எதார்த்தத்தை மீறாத சிறந்த படத்தை எடுத்ததுற்கு படகுழுவினரை பாராட்டியே ஆக வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *