நிலவில் தங்க முனைப்பு காட்டும் நாசா

நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நிதியை, அமெரிக்க அரசிடம் நாசா கேட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்று திரும்பும் வகையிலும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையிலும் விண்கலம், ராக்கெட்டுகளை தயாரிக்கும் முதற்கட்டப் பணியில் நாசா இறங்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவில் தங்கி மேலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ள நாசா முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கேட்டிருப்பதாக நாசா நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறியுள்ளார். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 விழுக்காடு அதிகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *