நிர்மலா சீதாராமன் ஜூலை 5 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்

இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்கிறார். தனிநபரக்ள் , நிறுவனங்கள், பொருளாதார வல்லுநர்கள், வரி செலுத்துவோர் ஆகியோர் தீவிரமாக இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் வேலை வாய்ப்பும் வெகுவாக குறைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. வேகமாக முன்னேறும் நாடு என்ற பட்டியலிருந்து விலகியது.

பட்ஜெட் 2019: இடைக்கால பட்ஜெட் 2019 பிப்ரவரி மாதம் அருண் ஜெட்லியான தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 5 பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. காலை 11 மணிக்கு பட்ஜெட் உரை தொடங்கும்.

பொருளாதார ஆய்வு

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பு பொருளாதார ஆய்வு அறிக்கையானது சமர்பிக்கப்படும். பொருளாதார ஆய்வறிக்கை நாட்டில் பொருளாதார வளர்ச்சியை சுருக்கமாக எடுத்துரைக்கிறது. பொருளாதார ஆய்வு அறிக்கை இந்திய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகரான கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன் இதற்கு பணியாற்றியுள்ளார்.