நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்துவரும் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர்.
தற்போது இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து உள்ளது. விரைவில் இவர்கள் 6 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *