நியூசிலாந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர் முடிந்ததும் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 18 ஆம் தேதி இத்தொடர் நிறைவு பெறுகிறது.அடுத்ததாக நியூசிலாந்து செல்லும் இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகளிலும்,3 டி 20 போட்டிகளிலும் பங்கு பெறுகிறது.

இந்த தொடர் ஜனவரி 23 ஆம் தேதி துவங்க உள்ளது. ஆஸ்திரேலிய தொடர் முடிந்து நான்கு நாட்கள் இடைவெளியில் நியூசிலாந்து தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு தொடரில் இடம் பெற்ற மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், உமேஷ் யாதவ் நீக்கபட்டு தினேஷ் கார்த்திக், மொகமது ஷமி, ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். டி 20 அணியில் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் அணி:

ஷிகர் தவான், ரோஹித் சர்மா், விராட் கோலி,  ராகுல் ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அஹமது, முகமது ஷமி.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 அணி:

ஷிகர் தவான், விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அஹமது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *