ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்களில் பங்கு பெறுகிறது.
முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கபட்டு உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேபியரில் புதன் கிழமை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி விவரம்:
மார்டின் கப்தில்,டாம் லதாம், கேன் வில்லியம்ஸன்(கேப்டன்),ரோஸ் டெய்லர், டிரன்ட் போல்ட், டாக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஷன், மாட் ஹென்ரி,கோலின் முன்ரோ, ஹென்ரி நிகோலஸ், மிட்ஷெல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி.