நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் டி20 போட்டியானது தற்போது ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் நியூசிலாந்து அணியின் தொடக்க விக்கெட்கள் வேகமாக விழுந்தன.
இலங்கை வீரர்கள் மலிங்கா, ரஞ்சிதா தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். தற்போது நியூசிலாந்து அணி 14 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 95 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டெய்லர் 28 ரன்களிலும், பிரஸ்வெல் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.