நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல் நிறுவனம்?

கடந்த 5 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் முதல் முறையாக ஊழியர்களின் சம்பளத்தை நிலுவையில் வைத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம்.  ஊழியர்கள், சங்கங்கள், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவை அணுகி ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.இந்நிலையில் மத்திய அரசு ஊதியத்தை வழங்க எந்த  ஒரு ஆதரவையும் அளிக்கவில்லை எனவும் வரும் வருவாயை வைத்து சம்பள  பிரச்னையைச் சரிசெய்து வருகிறோம் என்றும் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *