அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல் ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் பல மாவட்டங்களில் கடும் சேதங்கள் ஏற்படுத்த கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து உள்ளது. பானி புயல் ஆனது ஒடிசாவின் கோபால்பூர், சாந்த்பலி இடையே கடக்க கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது 205 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதிகளில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து உள்ளது.
நாளை கரையை கடக்கும் பானி புயல், கடும் சேதத்தை ஏற்படுத்த கூடும்?
