மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கூட்டணி முடிவுகள், போட்டியிடும் தொகுதி அறிவிப்புகள் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே அங்கீகாரம் கிடைக்காத சில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் தகவல்களும் வெளியாகி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம் வழங்கப்பட்டது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சிக்கு, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இதே சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு!
