
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய கபாலி படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு நன்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன் பின்தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பிற மொழிகளான இந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான, தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நடித்ததுடன் வேர்ல்டு வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஹாலிவுட் திரைபடங்களில் நடித்து வந்தாலும் தான் நினைத்த வெற்றியை அவர் பெறவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியிருக்கிறார். இதுபற்றி அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறிய போது,
என்னை பொறுத்தவரை மற்றவர்கள் வெற்றி என்று எதை நினைக்கிறார்களோ அதில் இருந்து நான் நினைக்கும் வெற்றி மாறுபட்டதாக உள்ளது.
இன்று வரை வெற்றி பெற்ற ஹீரோயினாக என்னை நான் உணரவில்லை. நான் நினைக்கும் வெற்றியை பெற்றுவிட்டதாக நான் அதை உணரவில்லை. அப்படி உணரும் போதுதான் நான் வெற்றி பெறுவேன்” என்று கூறியிருக்கிறார்.