
நான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்
Afridi afraid
சச்சின் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆக்தர் பந்தையும், சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இது குறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில்,
நான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார். சோயிப் அக்தரின் சில ஸ்பெல்களில் சச்சின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் சிறந்த பேட்ஸ்களும் நடுங்கினர். மிட் – ஆப் அல்லது கவர் திசையில் பீல்டிங் செய்யும் போது நீங்கள் அதை கவனிக்கலாம். அப்போது ஒரு வீரரின் உடல் அசைவுகள் தெரியும்.
ஒரு பேட்ஸ்மேன் வழக்கமான நிலையில் விளையாடுகிறாரா? அல்லது நெருக்கடியில் இருக்கிறாரா? என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். சோயிப் அக்தர் பயந்தார் என்று நான் சொல்ல மாட்டேன். சச்சின் டெண்டுல்கர் உள்பட பல முன்னணி பேட்ஸ்மேன்கள் அக்தரை எதிர்கொள்ளும் போது பேக்புட் செல்ல வேண்டியிருந்தது. உலக கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார்.
இது பெரிய விஷயல்ல. வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகும் போது, எதிர்கொள்வது கடினமானதாகி விடும். அப்ரிடி இப்படி சொல்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, நான் ஸ்கொயர் லெக்கில் பீல்டிங் செய்த போது, சோயிப் அக்தர் பந்து வீசும் போது சச்சின் கால்கள் நடுங்கியதை நான் பார்த்தேன் எனக் கூறியிருக்கிறார்.