நாட்டில் 2-வது பெரிய கோடீஸ்வரரும், விப்ரோ நிறுவனத்தின் அதிபருமான அசிம் பிரேம்ஜி ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது அவர் விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஜூலை 30-ம்தேதி முதல் அவர் தனது பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரிஷாத் பிரேம்ஜி விப்ரோவின் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று, நிர்வாக கமிட்டி கூறியுள்ளது.
தகவல் தொழில் நிறுவனமான விப்ரோ அடுத்த மேலாண்மை இயக்குனராக அபீதாலி நீமுச்வாலா பொறுப்போற்றுக் கொள்வர் அவர் இப்பொழுது தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வருகிறார்