இந்தியாதமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தல் குறிப்பு மோடி காணொளி மூலம் உரையாடுகிறார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்து. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் இது போன்று நடந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி காட்சி மூலம் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து கூறி வருகிறார்.

இதையடுத்து நாமக்கலில் காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார். பிரதமர் மோடி மற்றும் பாஜக கட்சி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்னும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் நடைபெறுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது பாஜக கட்சி.

இந்த நிலையில் பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த கருத்துக்களை தொண்டர்களுக்கு தெரிவித்து வருகிறார். இன்று நடக்க இருக்கும் இந்த காணொளி காட்சி கலந்தாய்வு தமிழகத்தில் சேலம், கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய ஐந்து தொகுதிகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் ஆகும்.

ஆதனால் இந்த உரையாடல் அந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் நாமக்கல் பொம்மைக்குட்டைம்மேடு கவின் மஹால் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.  எனவும் இதில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker