நாக்பூர் ஒரு நாள் போட்டியின் சுவாரசியங்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 251 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய அணி 242 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

சாதனை துளிகள்

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தனது 500- வது வெற்றியை பதிவு செய்தது.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் 50 ரன்களுக்கு மேல் அடித்த ஏழு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்துள்ளது.

224 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி நேற்றுடன் 32 ஆட்டநாயகன் விருதுகளை பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 62 ஆட்டநாயகன் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.2017- ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணி தான் விளையாடிய 50 போட்டிகளில் 22 முறை எதிரணியை ஆல் அவுட் செய்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *