நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் வானவன்மகாதேவி கோடியக்கரை மணியன் தீவு உள்ளிட்ட 10 மேற்பட கிராமகள் உள்ளன .
கடந்த சில நாட்களாக வேதாரண்யம் கடற்கரையில் பகுதியில் கடுமையான சூறைக்காற்று
வீசியது இதனால் படகுகள் கவிழ்த்துவிடும் ஏன்ற அச்சத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர் பின்னர் ஓரளவு சகஜநிலை திருப்பியதால் மீண்டும் கடலுக்கு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று முதல் கடற்பகுதியில் 50 கி.மீட்டர் வேகத்தில் கடும் சூறைக்காற்று வீசியது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். அப்போது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சில பைபர் படகுகளில் கடல் நீர் புகுந்தது. உடனே அந்த படகுகளை கரைக்கு கொண்டு வந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 5 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று தொடர்ந்து 2வது நாளாக நாகையில் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *