நாகப்பட்டிணம் கடும் பாதிப்பு

கஜா புயலானது நேற்று இரவு 12 மணி அதிகாலை 3 மணியளவில் நாகப்பட்டிணத்திற்கும் வேதரண்யத்திற்கும் இடையில் கரையை கடந்தது.

நாகை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்ப்பட்டு உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டு உள்ளது. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன.. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. ஆயிரங்கனக்கான மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.கடுமையான பதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாகை, வேளங்கன்னி, வேதரண்யம், காரைக்கால், பட்டுக்கோட்டை, கடலூர் ஆகிய பகுதிகளில் காற்றோடு கூடிய கனத்தமழை பெய்தது.

அதன் பாதிப்பு இன்று இருக்கும் என்பதால் நாகை, கடலூர், காரைக்கால், பட்டுகோட்டை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மீட்ப்புபணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

மக்கள் பாதுக்காப்பன பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுகளும், மருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது

கஜா புயலினால் 10,000 க்கும் மேற்ப்பட்ட மின் கம்பங்கள் சேதமடைத்துள்ளன. இதனால் கூடுதலன மின் ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இங்குப் பல ஏக்கரில் உள்ள தென்னைமரங்கள்,   மாமரங்கள், வாழை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலானது முழுவதும் கரயை கடந்து தற்போது திண்டுகல் மேல் மையம் கொண்டுள்ளது. இது மேற்க்கு நோக்கி நகர்ந்து நாளை அரபிக்கடலில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுக்கிற்து.

இங்குக் கற்றின் வேகம் 60-70 கி.மீ வேகத்தில் இருக்கும்.

கடலோர மாவட்டங்களில் குறைந்த அளவே காற்று இருக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *