நமது தேசத்தின் தாயாக பசுவை இமாச்சலப் பிரதேசம் சட்டசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவும் ஆதரவு அளித்த வந்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து காங்., எம்.எல்.ஏ அனிருத் சிங் கூறுகையில் மனிதர்களுக்கு பல வகைகளில் பசுக்கள்.உதவுகின்றன பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டால் பசுக்கள் தேவை இல்லாமல் போய்விடும். அப்பொழுது பசுக்கள் கொல்லப்படுகின்றன அதனால் அந்த நிலையில் பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க இது அவசியம்.
இதைத்தொடர்ந்து இமாச்சல் மாநிலத்தில் கால்நடை துறை சார்பில் பசுக்களைப் பராமரிக்க காப்பகங்கள் அமைக்கப்படும். அதனால் இந்த நிலையில் பசுவை தேசிய பசுவாக அறிவிக்க தேசிய விலங்குகள் வாரியம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன் இதே போன்ற உத்திரகாண்ட் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.