இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆன வி.வி.எஸ் என அனைவரலும் அழைக்கப்படும். வி.வி.எஸ்.லக்ஷ்மணன் அவர்கள் தனது கிரிக்கெட் வாழ்க்கையை “281AndBeyond” எனப் புத்தகம் ஒன்றை நீண்ட நாட்களாக எழுதிவந்தார். அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தைச் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
தற்பொழுது அப்புத்தகத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அவர்களின் தலைமையில் கொல்கத்தாவில் நடைபெற்ற எளிமையான நிகிழ்ச்சியில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கங்குலியும், ஜகிர்கானும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இப்புத்தகத்தைக் கிரிக்கெட் ரசிகர்கள், வல்லுனர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தனர். இதன் தலைப்பையும் வித்தியாசமாகக் கொடுத்து உள்ளார்.
இவ்விழாவின் இறுதியில் லக்ஷ்மணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.