நடிகை காஜல் அகர்வால்

தென்னிந்தியா திரை உலகத்தில் கலக்கி வரும் நடிகை காஜல் அகர்வால் சில நாட்களுக்கு முன்னர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக் அப்’ போடாமல் ஷேர் செய்துள்ள போட்டோஸ் வைரலாகி உள்ளன அந்த படங்கள் வைரலானதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன
ஒன்று, காஜல், ஒரு நடிகை என்பதை பொருட்படுத்தாமல் மேக்-அப் இல்லாமல் போஸ்ட் போட்டது. இரண்டாவது, அவர் அந்த போட்டோக்களுடன் பதிவிட்ட விஷயம்.

“சம காலத்தில் மக்கள், அவர்கள் யார் என்பதை உணருவதே இல்லை. அதற்குக் காரணம், வெளிப்புறத் தோற்றத்தின் மீது இந்த உலகம் வைத்திருக்கும் மதிப்பாக இருக்கலாம். இல்லையென்றால், நமக்கு இருக்கும் சுயமரியாதையை சமூக ஊடகங்கள் முழுவதுமாக முழுங்கியதனால் இருக்கலாம். உங்களுக்கான கச்சிதமான உடல் மற்றும் உருவத்தைத் தருவதற்காக பல கோடி ரூபாய் பணம், காஸ்மடிக் பொருட்களில் செலவழிக்கப்படுகிறது. இது எல்லா இடத்திலும் இருக்கும் ஓரு விஷயம்தான். நாமும் எல்லோரைப் போல இருக்க முயல்கிறோம். ஆனால், நாம் யார் என்பதில் தெளிவு இருந்தால் மட்டும்தான் நம்மால் உண்மையாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். மேக்-அப் மூலம் வரும் அழகு, நம்மை வெளிப்புறத்தில் எப்படிப்பட்டவர்கள் என்று காட்டும். ஆனால் உட்பறுத்தில் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அது நிர்ணயிக்குமா? உண்மையான அழகு என்பது, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *