
கோலிவுட்
நடிகை ஓவியா படத்துக்கு இசையமைக்கும் சிம்பு
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளரும் ஆன ஓவியா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ஓவியா 90 எம்எல்’. இந்தப் படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்கிறார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தில் நடித்து வரும் சிம்பு கிடைக்கும் இடைவேளையில் இசையமைத்தும் வருகிறார். நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என வலம் வந்த நடிகர் சிம்பு தற்போது இசைகளையும் அமைத்து இசையமைப்பாளராகவும் வலம் வரத் தொடங்கியுள்ளார்.
இது சிம்புவின் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை தறுகிறது. லிட்டில் ஸ்டார் என அழைக்கப்படும் சிம்பு தற்போது இசையமைப்பாளர் சிம்பு எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.