நடிகர் சங்க தேர்தல் வெற்றி யாருக்கு!

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடிகர் சங்க தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5மணி வரை நடைபெற்றது.

இதில் முன்னணி நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா,ஆர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் தங்களது வாக்கினை பதிவு செய்தார்கள். ரஜினி இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நாடக நடிகர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்திருக்கிறார்கள். சுமார் 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவுகள் பத்திரமாக  வைக்கப்பட்டுள்ளது . வரும் 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

வாக்களித்த அனைவரும் நீதியின் பக்கம் வெற்றி இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *