இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர் புவனேஷ் குமாரின் சிறப்பான பந்து வீச்சில் அலெக்ஸ் ஹேரி 5 ரன்களிலும், ஆரோன் பின்ச் 14 ரன்களிலும் தொடக்கத்திலேயே வெளியேறினர்.
அதன் பின் இணைந்த ஷேன் மார்ஷ் மற்றும் கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.கவாஜா 34 ரன்களில் சஹால் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் ஷேன் மார்ஷ் 39 ரன்களில் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
அதன் பின் ஆஸ்திரேலிய வீரர்கள் குறிப்பிட தகுந்த பேட்டிங் ஆட்டதிறனை வெளிபடுத்தவில்லை. ஹேன்ட்காம்ப் மட்டும் ஓரளவு தாக்குபிடித்து 63 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர் சஹால் 10 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.புவனேஷ் குமார் மற்றும் முஹமது சமி தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.