தொடரை வென்று தென்ஆப்ரிக்கா அணி அசத்தல்

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 5 வது ஒரு நாள் போட்டியானது கேப்டவுனில் நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 240 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் பேக்கர் ஜாமான் அதிகபட்சமாக 73 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார். இமான் வாசிம் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். சிறப்பாக பந்து வீசிய தென்ஆப்பிரிக்கா வீரர்கள் பிரிட்டோரியா மற்றும் பெளுக்வேயோ தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 40 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியின் அதிரடி வீரர் குவின்டன் டி காக் 58 பந்துகளில் 83 ரன்கள் அடித்து உஸ்மான்கான் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் மற்றும் வான் டெர் டஸ்சென் தலா 50 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்த தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என தென் ஆப்ரிக்கா அணி வென்றது. ஆட்ட நாயகன் விருதை தென் ஆப்ரிக்கா வீரர் டி காக்ம், தொடர் நாயகன் விருதை பாகிஸ்தான் வீரர் இமாம் உள் ஹாக்ம் பெற்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *