இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 3 வது ஒரு நாள் போட்டியானது பே ஒவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 243 ரன்கள் எடுத்தது.அந்த அணியின் ரோஸ் டெய்லர் அதிகபட்சமாக 106 பந்துகளில் 93 ரன்கள் அடித்தார். விக்கெட் கீப்பர் லாதம் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் முகமது ஷமி 3 விக்கெட்களையும், புவனேஷ் குமார், சாகல் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்களும் கைப்பற்றினர்.
அடுத்து 244 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இந்திய 43 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 245 எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ரோஹித் ஷர்மா 62 ரன்களும், விராட் கோலி 60 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அம்பத்தி ராயுடு 40 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களிலும் கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் பவுல்ட் 2 விக்கெட்களை கைபற்றினார்.
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது 3 போட்டிகளை வென்று உள்ள இந்திய அணி தொடரை கைபற்றி உள்ளது.3 முக்கிய விக்கெட்களை கைபற்றிய முஹமது ஷமி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.