தொடரை சமன் செய்தது பாகிஸ்தான்

 

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நான்காவது ஒரு நாள் போட்டி ஜோகனேஸ்பார்கில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் பாப் டூ பிளேசிஸ் அதிகபட்சமாக 57 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் பவுலர் உஸ்மான் கான் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்கள் கைபற்றி அசத்தினார்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 32 வது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹாக் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். பேக்கர் ஜாமன் 44 ரன்களும், பாபர் அசாம் 41 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

4 விக்கெட்களை கைப்பற்றிய உஸ்மான் கான் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஒரு நாள் தொடர் 2_2 என சமனில் உள்ள நிலையில் 30 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *