தொகுதி பட்டியல் விரைவில் வரும் என ஓபிஎஸ் தகவல்!

தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பட்டியில் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக – 7, பாஜக – 5, தேமுதிக- 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு முடிந்தாலும் எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூத்த தலைவர் ஞானதேசிகன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கட்சி சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *