தேவ் விமர்சனம்

காதலர் தினமான இன்று முழுக்க முழுக்க ரொமான்ஸ் திரைப்படமான தேவ் வெளியாகி உள்ளது. தீரன், கடைக்குட்டி சிங்கம் என இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு அடுத்தாக கார்த்தி நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்.

 

போட்டோகிராபி வேலை செய்யும் தேவ் நண்பர்களுடன் சந்தோஷமாக ஊர் சுற்றி கொண்டு வாழ்ந்து வருகிறார். அவரை காதலித்து திருமணம் செய்யுமாறு நண்பர்கள் கூற காதலியை தேட  ஆரம்பிக்கிறார். தேவ்விற்கு சுயமாக உழைத்து தொழிலதிபர் ஆன மேக்னாவை ரொம்ப பிடித்து போக அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ஆனால் மேக்னாவிற்கு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை. மேக்னாவின் அம்மாவை அவரது தந்தை பிரிந்து சென்றதால் ஆண்களின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. தேவ் மேக்னாவின் நம்பிக்கையை பெற்றாரா, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களா என படத்தின் இரண்டாம் பாதி சொல்கிறது.

தேவ்வாக வரும் கார்த்தியும்,மேக்னாவாக வரும் ராகுல் ப்ரீத் சிங்ம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். கார்த்தியின் அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ்ம், ராகுல் ப்ரீத்ன் அம்மாவாக வரும் ரம்யாகிருஷ்ணனும் கச்சிதமான நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளனர். கார்த்தியின் நண்பர்களாக வரும் விக்னேஷ் மற்றும் அம்ருதா சீனிவாசன் நடிப்பும் சொல்லி கொள்ளும் அளவில் உள்ளது.

முதல் பாதியை சுவாரசியமாக நகர்த்தி சென்ற அறிமுக இயக்குனர் ரஜத் ரவி ஷங்கர் இரண்டாம் பாதியில் சற்று தடுமாறி உள்ளார். ஆனால் அதை வேல் ராஜின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும் மிகைபடுத்தாமல் நம் கண் முன் வந்து நிற்கின்றன.

ஹாரிஸ் ஜெயராஜ்ன் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் மற்றொரு பலம் ஆகும். ரொமான்ஸ் திரைப்படத்திற்கு தேவையான பின்னணி இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அற்புதமாக வழங்கி உள்ளார். ரொமான்ஸ் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்கள் ஒரு தடவை பார்க்க கூடிய திரைப்படம்தான் தேவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *