மத்தியப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாகத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாரதபிரதமர் மோடி அவர்களும் கடுமையான பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
மொத்தம் 2907 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 230 தொகுதியாகும். பாஜக 230 தொகுதிகளிலும், காங்கிரஸ் 229 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.நேரியிடையான போட்டி கங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையில் தான் உள்ளது.
கடந்த 15 வருடங்களாகப் பாஜகவே ஆட்சியில் உள்ளது. எனவே இம்முறை எப்படியும் ஆட்சியைக் கைப்பற்ற கங்கிரஸ் முயற்சி செய்கிறது.
ஆனால் ஆளும் பாஜகவும் ஆட்சியைத் தக்க வைக்கக் கடும் முயற்சி செய்கிறது.ஆனால் கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கே வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.