கூட்டணி குறித்து விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் எனவும் கட்சி மீது விமர்சனம் வைப்பதால், கூட்டணி வைக்கமாட்டோம் என அர்த்தமில்லை எனவும் பிரேமலதா பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.தேமுதிக கொள்கையில் உறுதியாக உள்ளது, நாடாளுமன்ற தேர்தல் என்பதால் ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து ஆக வேண்டும்.எங்களுக்கான தொகுதிகள் கிடைப்பதற்காக காத்திருந்து பொறுமையாக கையாள்கிறோம். தனித்துப் போட்டியிட தேமுதிக என்றைக்கும் அஞ்சியதில்லை எனவும் கூறினார்.
பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காதது பற்றியும் பிரேமலதா விளக்கம்.கூட்டணி உடன்பாடு இறுதி செய்யப்படாத நிலையில் நாங்கள் எப்படி பொதுக்கூட்டத்திற்கு சென்றிருக்க முடியும்?பொதுக்கூட்டத்தில் ஃபோட்டோ வைக்க வேண்டாம் என்றுகூடத்தான் கூறினோம். பாமகவை முதலில் அழைத்து கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டதால்தான் எல்லா குழப்பமும் ஏற்பட்டது.
பாமகவை முதலில் அழைத்துக் கையெழுத்திட்டதால்தான் எங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டது – அந்த நேரத்தில்தான் திமுக அழைத்தது. மறுப்பு தெரிவிப்பது எங்கள் இஷ்டம். எங்கள் இஷ்டத்திற்குத்தான் நாங்கள் மறுப்பு தெரிவிப்போம். ஒரு பெண் இருந்தால் 10 பேர் வந்து பெண் கேட்கத்தான் செய்வார்கள் – கட்சியென இருந்தால் கூட்டணிக்கு அழைக்கத்தான் செய்வார்கள் என பேசினார் தேமுதிக பொருளார் பிரேமலதா.