தேசம் காப்போம் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் “தேசம் காப்போம்” என்கிற தலைப்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்தியாவில் நடந்து கொண்டிருக்கக்கூடிய யுத்தமே சனாதனத்துக்கும் ஜனநாயகத்துக்குமான யுத்தம் தான். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் காலத்தில் சனாதன சக்திகள் ஆட்சியில் இல்லை. ஆனால், இன்று ஆட்சிக்கே அவர்கள் வந்து விட்டார்கள். எனவே நாம் இன்னும் கூர்மையாகப் போராட வேண்டும் என்றேன்.

ஏழைத்தாயின் மகன் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, ‘அண்ணல் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றப் போகிறேன்’ என்றார்! இதைவிட அம்பேத்கருக்கு அவமானம் தேடித்தரவேண்டிய வேறு காரியம் ஏதேனும் உண்டா?

தேசத்தையே 41 சதவிகிதத்துக்கு விற்கக்கூடிய அரசாங்கம் தான் இந்த மோடி அரசாங்கம். எனவே, இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 41 சதவிகிதம் அல்ல 100 சதவிகிதத்தையும் விற்றுத் தீர்த்து விடுவார்கள். அந்த நிலையில் தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

வரவிருக்கின்ற தேர்தலில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் ஒரு வேலை தான்; அது மோடியை வீட்டுக்கு அனுப்புவது.

நமக்கு இரண்டு வேலைகள் காத்திருக்கிறது – மோடியோடு சேர்த்து எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – அதற்கு இந்த ‘தேசம் காப்போம் மாநாடு’ தொடக்கமாக அமையட்டும் என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *