ஜோகனஸ்பர்க்கில் நடந்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் மார்க்ரம் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்து பாஹிம் அஷ்ரஃப் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஹசிம் அமலா 41 ரன்களிலும், டி புருன் 49 ரன்களிலும், ஹம்சா 41 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
மற்ற தென் ஆப்ரிக்கா வீரர்கள் யாரும் குறிப்பிட தகுந்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. பாகிஸ்தான் அணி தரப்பில் பாஹிம் அஷ்ரஃப் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார். அமிர், முகமது அப்பாஸ், ஹாசன் அலி தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்களை இழந்து 17 ரன்கள் எடுத்து உள்ளது. சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்ரிக்காவின் பிலான்டர் 2 விக்கெட்களை கைபற்றி உள்ளார்.