தென் ஆப்ரிக்கா அணி வெற்றி

நேற்று டர்பனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹாசன் அலி அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய ஃபெளுகேயோ 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.

அடுத்து களம் இறங்கிய தென் ஆப்ரிக்க அணி 42 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. தென் ஆப்ரிக்காவின் டஸ்சென் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். மற்றொரு வீரர் ஃபெளுகேயோவும் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல் பட்ட ஃபெளுகேயோ ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

தற்போது ஒரு நாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *