மலையின் மீது, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தூய்மை அருணை இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்.
தூய்மை அருணை இயக்கத்தின் அமைப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், மரக்கன்றுகள் நடுவதை தேசிய இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்றும், மரக்கன்று நடுவது வாழ்வின் அங்கமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நடிகர் விவேக் தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவது குறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது