துப்பாக்கிச்சூட்டில் 6 பேர்பலி?

அமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானதாக நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்களில் 3 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். மேலும், 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *