மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்க உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சென்னையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டுமா?
