சென்னை கிண்டியில் உள்ள மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி நிலையத்தின் பொன் விழா கொண்டாட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிளாஸ்டிக் நுகர்வோர் பட்டியலில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் இருப்பதாக கூறினார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியாது என்ற போதிலும் குறைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்