உலக முதலீட்டார்கள் மாநாட்டில் இன்று பிற்பகல் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசுகிறார்.
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
அப்போது, முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.