ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் 4 போலீசார் பலியாயினர். இதுகுறித்து காஷ்மீரை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுயது.
சோபியான் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் காஷ்மீர் பண்டிட் வசித்து வந்தனர்.அவர்கள் குடும்பத்தாருக்கு பாதுகாப்புக்காக போலீசார் 4 பேர் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
காஷ்மீரில் போலீசார் கூடாரத்தில் 4 போலீசார் தங்கியிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் அமைப்பு போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர் 3 போலீசார் இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.