சமீபத்தில் நடைபெற்ற தேசிய தேர்தலில் பாஜக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது. திங்களன்று புதிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படைகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினார். எந்தவொரு விமர்சனத்திற்கும் அஞ்சாமல் பூரண சகிப்புத்தன்மையில்லா கொள்கையை தொடர வேண்டும் என்று கூறியுள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. மாறாக சமூக காரணங்களையும் ஆராய்ந்து அதிலும் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் பலரும் மீண்டும் தீவிரவாதத்துடன் இணைந்திடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
திங்கள்கிழமை உள்துறை அமைச்சகத்தின் சந்திப்பில் அமித் ஷா காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெறும் ரம்ஜான் விழாபற்றி விளக்கினார். ஒருமணிநேரம் நடந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டெவல், உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் மற்றும் உள்துறை செயலாலர் ராஜீவ் க்யூபா ஆகியோர் கலந்து கொண்டனர்.