வெதர்மேன் பீரதிப்ஜானின் முகநூல் பதிவு
மன்னார் வளைகுடா பகுதியில் மையம்கொண்டுள்ள குறைந்த காற்றழந்த வாயு மண்டலம் தென்கோடியை நோக்கி மெதுவாக நாகர்கிறது.இதனால் டெல்டா மாவட்டங்களில் மிகக் கடுமையான மழையை எதிர்பார்க்கலாம் அதன் பிறகு மாவட்டங்களில் மழை பரவலாக வர வாய்ப்பு உள்ளது.
இந்தத் தாக்கத்தின் காரணமாகத் தென் கடலோர மாவட்டங்களான கன்னியாக்குமரி,நெல்லை ,தூத்துக்குடி,இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் அடுத்த 48மணிநேரத்தில் மிகக் கனமழையை எதிர்பார்க்கலாம், தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்கலில் மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னையில் திடீரென மழைபெய்ய வாய்ப்புள்ளது. இன்று அடுத்த 12 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்பில்லை இரவில் மழை வர வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டா என்றால் உண்டு என்றோ, இல்லை என்றோ தெளிவாகக் கூற இயலாது. ஆனால் இந்த வார இறுதியில் நிச்சையம் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இலங்கையின் அருகே உருவாகி உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வுப் பகுதி மன்னார் வளைகுடா வரை சென்று பின்பு கன்னியாகுமரி நோக்கி நகர்கிறது. இதனால் தீபாவளிக்கு அதிக மழைப்பெய்ய வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.